உடுமலை தமிழிசைச் சங்கம்

தமிழ் இசையினை என்றும் வளர்க்கும் நிலையான நிறுவனமாகத் தமிழிசைச் சங்கமானது சென்னையில், 1943 ஆம் ஆண்டு, மே திங்களில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் துவங்கப்பட்டது. தமிழ் இசை வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்கும், இசை மேதைகளை ஒருங்கிணைக்கும் சங்கமாகவும், இசை வல்லுநர்களை உருவாக்கும் கல்லூரியாகவும் தமிழிசைச் சங்கமானது விளங்கி வருகின்றது.

தமிழ்ப் பண் ஆராய்ச்சியில் பெரும் பங்கினை தான் தம் பெரும் தமிழ்ச் சேவையால் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தமிழ்ப் பேரறிஞர்களை கெளரவப்படுத்தும் விருதான இசைப்பேரறிஞர் விருதை வழங்கி பெரும் இசைக் கலைஞர்களை கௌரவித்து வருகிறது. ஆண்டுதோறும் இசை ஆராய்ச்சிக் கூட்டங்களை நடத்தி அதன் மூலம் பல அரிய தமிழிசைச் செய்திகளை நாட்டிற்கு அளித்து வருகின்றது.

பண்டைய இசைக் கருவிகளின் தொகுப்புகளையும், அக்கருவிகளையும் பாதுகாப்பாக இன்றும் சேகரித்து வைத்துள்ளது. இதன் பொக்கிஷமாக விளங்கக் கூடிய பல அரிய தமிழ் இசை நூல்களின் சுரங்கமாகவும் விளங்கி வருகின்றது. பல இசைக் கலைஞர்கள் மற்றும் அறிஞர்களின் நூல்கள், தமிழிசைச் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழிசைக் கல்லூரியானது தமிழிசைச் சங்கத்தின் பெரும் பணிகளுள் ஒன்றாகும். காலை நேர மற்றும் மாலை நேர இசை வகுப்புகளை குறைந்த கட்டணத்தில் நடத்தி பல இசைக் கலைஞர்களை உருவாக்கி வருகின்றது. அரசு அங்கீகாரம் பெற்ற பட்டயங்களை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கி மேன்மை படுத்தி வருகின்றது.

சங்கத்தின் இலக்கு

01

— செயல்பாடு 1

உலகமொழிகளுள் தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது. அவ்வாறே தமிழ் இசையும், முத்தமிழும் இந்த நாட்டில்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நன்கு வளர்ந்த்து வருவன.

02

— செயல்பாடு 2

தமிழ் கலாச்சாரத்தின் கலைகளுக்கு பங்களிப்பு, குழந்தைகளில் உள்ள கலை திறமைகளை வெளியே கொண்டு வருவதற்கும், இந்த சங்கம் நிறுவப்பட்டது.

03

— செயல்பாடு 3

தமிழ் இலக்கியங்களுக்கு பங்களிப்பதற்கும், தமிழ் படைப்பாளர்களின் படைப்புகளைப் பாராட்டுவதற்கும், இந்த சங்கம் நிறுவப்பட்டது.

04

— செயல்பாடு 4

உடுமலையின் பெருமையை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் கடமை கொண்டது

05

— செயல்பாடு 5

இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் இச்சங்கம் போற்றும்

06

— செயல்பாடு 6

உலகமொழிகளுள் தமிழ் மொழி மிகத் தொன்மை வாய்ந்தது. அவ்வாறே தமிழ் இசையும், முத்தமிழும் இந்த நாட்டில்தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நன்கு வளர்ந்த்து வருவன.

தமிழின் பெருமக்கள்

இயல்

இயற்றமிழ் இயல்பான பேச்சு, எழுத்து, இலக்கியங்கள், பல்வேறு துறைகள் என வளர்ந்தது ஆகும். இன்றைக்கு கணினி வரையிலான கல்வி இதன் விரிவு ஆகும்.

இசை

இசைத்தமிழ் எண்ண இயக்கத்தில் தொடங்கி, வாஆஆஆ போஓஓஓ என்று நெட்டொலியால் வளர்ந்து இன்றைய திரையிசை வரை வளர்ந்தது ஆகும்.

நாடகம்

நாடகத்தமிழே காலத்தால் முந்தையது ஆகும். அது உடலசைவு மொழியில் தொடங்கி விளையாட்டு, நடனம், போர், போராட்டம் என்று தொடர்ந்து இன்றைய திரைத்துறை வரை நீள்வது ஆகும்.

இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் தமிழ் மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் வெளிப்படுத்தி நிற்கின்றது. மொழியை இசையுடனும், நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் காணப்படாத சிறப்பு எனலாம்.

இயல்இசைகூத்து என்பன முத்தமிழ். இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ். இசை என்பது பண்ணிசைத்துப் பாடப்படும் தமிழ். கூத்து என்பது ஆடல்பாடல்களுடன் உணர்த்தப்படும் தமிழ்.

உடுமலையின் பெருமக்கள்

நகராட்சி 1918 இல் நிறுவப்பட்டது மற்றும் 1970 இல் இரண்டாம் தர நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இது 1979 இல் முதல் தர நகராட்சியாக அறிவிக்கப்பட்டது, மேலும் 1984 இல் தேர்வு தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. நகராட்சியின் பரப்பளவு 7.41 கிமீ2 இதில் 6.582 கிமீ2 நகர்ப்புறம் மற்றும் 0.828 கிமீ2 கிராமப்புறம். 2008 ஆம் ஆண்டு வரை கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்நகரம், புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது, இது குடியிருப்பாளர்களால் எதிர்க்கப்பட்டது.

உடுமலை மூன்று புறமும் மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. நகரத்தின் சராசரி உயரம் MSL இலிருந்து 1208 அடிகள். நிலப்பரப்பு அலை அலையானது மற்றும் பொதுவான சாய்வு மேற்கிலிருந்து வடக்கு நோக்கி உள்ளது. கறுப்பு களிமண் மண் இப்பகுதியின் பிரதான மண். தென்மேற்கு பருவமழை காலத்தில் இந்த நகரம் பெரிய மழையைப் பெறுகிறது. ஆண்டு சராசரி மழையளவு 501.40 மி.மீ.